சிங்கம்புணரி வடுகபைரவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2363 days ago
சிங்கம்புணரி : பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி திருக்கொடுங்குன்றநாதர் சன்னதியில் உள்ள நந்தீஸ்வரருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
தொடர்ந்து திருக்கொடுங்குன்றநாதருக்கும் அபிஷேக ஆதாதனை செய்யப்பட்டது.சிங்கம்புணரி அருகேயுள்ள சிவபுரிபட்டி தர்மஸம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதோஷவிழா கொண்டாடப்பட்டது.
நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.