ஸ்ரீவில்லிபுத்தூரில் இயேசுவின் திரு இருதய ஆண்டு பெருவிழா
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், இயேசுவின் திரு இருதய ஆண்டு பெருவிழா நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த ஜூலை 19 அன்று திண்டுக்கல் பெஸ்கி இல்ல அதிபர் தந்தை மைக்கேல்தாஸ் தலைமையிலும், ஸ்ரீவில்லிபுத்துார் மறைவட்ட அதிபர் அல்வரஸ் செபாஸ் டின், உதவி பங்கு தந்தை ஆனந்த், சுந்தரநாச்சியார்புரம் பங்குதந்தை அந்தோணிராஜ் முன்னி லையிலும் கொடியேற்றத்துடன் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது.
தினமும் ஆலயத்தை சுற்றி ஆண்டவர் சுரூபம் தாங்கிய சப்பரபவனி நடந்தது. நேற்று முன்தினம் ஜூலை 28 இரவு திருவிழா திருப்பலியினை, மதுரை உயர்மறை மாவட்ட குடும்ப நல்வாழ்வு பணிக்குழு செயலர் ஜோசப் அடிகளார் தலைமையேற்று மறையுரையாற்றினார். பின்னர் ஆலயத்திலிருந்து நற்கருணையானது நகரின் முக்கிய வீதிகளில் பவனியாக எடுத்து செல்லப்பட்டு, மீண்டும் ஆலயத்திற்கு வந்தபின், கொடியிறக்கம் செய்யப்பட்டது.
விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடு களை வட்டார அதிபர் அல்வரஸ் செபாஸ்டின், உதவி பங்குதந்தை ஆனந்த் மற்றும் பங்கு பேரவையினர் செய்திருந்தனர்.