காரைக்கால் சந்தன மாதா ஆலயத்தில் மின் விளக்கு அலங்கார தேர்பவனி
ADDED :2513 days ago
காரைக்கால் : காரைக்கால் பிள்ளை தெரு வாசல் புனித சந்தன மாதா ஆலயம் ஆண்டு திரு விழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர்பவனி நடந்தது.
காரைக்கால் பிள்ளை தெரு வாசல் பகுதியில் உள்ள புனித சந்தன மாதா ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி சிறிய தேர் பவனி, நற்செய்திக் கூட்டம் நடந்தது.
தெடார்ந்து மறுநாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆண்டு பெருவிழாவையொட்டி மின் விளக்கு அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மறுநாள் திருப்பலியை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.விழா ஏற்பாடுகளை உதவி பங்கு குரு இருதயராஜ் மற்றும் கிராம நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், சின்னப்பன், அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.