உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி மாவட்டத்தில், ’நடுகற்கள் கணக்கெடுப்பு பணி விரைவில் துவங்கப்படும்

தர்மபுரி மாவட்டத்தில், ’நடுகற்கள் கணக்கெடுப்பு பணி விரைவில் துவங்கப்படும்

தர்மபுரி: ”தர்மபுரி மாவட்டத்தில், நடுகற்கள், ஈமக்குழிகள் ஆகிய வரலாற்று  சான்றுகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கணக்கெடுப்பு பணி விரைவில்  தொடங்கப்படும்,” என, தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன் பேசினார்.

தர்மபுரியில் நடந்து வரும் புத்தக திருவிழாவில், மூன்றாம் நிகழ்ச்சியாக, ’புதியன  விரும்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்ச்சங்க தலைவர்  ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், தொல்லியல்துறை ஆணையர்  உதயசந்திரன் பேசியதாவது: கீழடியில், ஆய்வில் கிடைத்திருப்பதை ஆய்வு  செய்தபோது, கி.மு., ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக வும், ஆதிச்சநல்லூர்  ஆய்வில் கிடைத்திருக்கும் அரிய பொருட்கள், கி.மு., ஒன்பதாம் நூற்றாண்டை  சேர்ந்தது எனவும் தெரிய வந்துள்ளன.

ஆனால், தகடூர் (தர்மபுரி) பகுதிக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உள்ளது. இப்பகுதியில், நடுகற்கள், பெருங்கற்கள், ஈமக்குழிகள், ஆதி மனிதன் பயன்படுத்திய கோடாரி ஆகியவை, அவற்றை உறுதி செய்துள்ளது. இதுபோல் எண்ணற்ற வரலாற்று சான்றுகள் தர்மபுரியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது குறித்து தொல்லியல் துறை சார்பில், விரைவில் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட உள்ளது. ஆங்கிலேய அதிகாரி சர்.தாமஸ் மன்றோ கலெக்ட ராக இருந்து, பணியை துவங்கியது தர்மபுரியில் தான். கற்காலம் முதல், ஆங்கிலேயர் காலம் வரை, பல மாற்றங்களை கொண்டு வந்தது தர்மபுரி மண். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !