நல்லம்பள்ளி அருகே முனியப்பசாமி கோவில் திருவிழா
ADDED :2261 days ago
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே எட்டியானூரில், ஸ்ரீபுள்ள முனியப்ப சாமி திருவிழா கொடி யேற்றத்துடன் நேற்று (ஜூலை., 29ல்) துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வாக, புள்ள முனியப்ப சுவாமிக்கு முப்பூஜைகள் நடந்தன. அப்போது, பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. நல்லம்பள்ளி, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை சுவாமிக்கு பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.