ஆத்தூர் பிரதோஷ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு
ஆத்தூர்: சோமவார பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர் சுற்றுவட்டார சிவன் கோவில்களில் நடந்த பூஜையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், மூலவர் கைலாசநாதர், ஆதிபராசக்தி மற்றும் நந்தி சுவாமி க்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், தயிர், வெண்ணெய் போன்ற, 16 வகையான அபிஷேக பூஜை கள் நடந்தன. பின், கைலாசநாதர், ஆதிபராசக்தி, நந்தி சுவாமி ஆகியோர் மலர், காய்கறி, பழங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்ம லேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. காளை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெரியநாயகி சமேத கரபுரநாதரை சிவ, சிவ கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு திருக் கோவிலை மூன்று முறை வலம் வந்தனர்.
* பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாக ரேஸ்வரர் கோவில்களில் நேற்று 29ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மேல், நந்திக்கு பால், திருமஞ்சனம், தயிர், தேன், பழவகைகள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதேபோல, வாழப் பாடி அருகே பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவிலிலுள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், கோவில் உட்பிரகார த்தில் உற்சவ மூர்த்தி களான நடராஜர், அம்பாள் வலம் வந்தனர்.