உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம், : கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தில் பூமாணி  முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 27ம்  தேதி, முதல்கால யாகவேள்வி பூஜை களும், யாகமும் நடந்தது. 28ம் தேதி காலை  6:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. 9:15 மணிக்கு கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும்  அதனைத்தொடர்ந்து மகாகும்பாபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து, பக்தர்களுக்கு  நன்னீர் கலசமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. வீரங்கிபுரம், புதுப்பாளையம்,  கண்டாச்சிபுரம் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !