உளுந்துார்பேட்டை கிருபாபுரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் விழா
உளுந்துார்பேட்டை : திருவெண்ணைநல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரர் தேவாரம் முற்றோதல் விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 28ம் தேதி காலை 7:00 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதல் விழா துவங்கியது. திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் தலைவர் தாமோதரன் தலைமையில் மாலை 5:00 மணி வரை தொடர்ந்து சுந்தரரால் பாடப் பெற்ற 100 சிவத்தலங்களின் தேவாரம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த 27ம் தேதி இரவு சிவனடியார்கள் கயிலை வாத்தியங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட சுந்தரரின் உற்சவ மூர்த்தியை நடனமாடியபடி மாடவீதியை வலம் வந்தனர்.சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல், புதுச்சேரி, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிவனடியார்கள் பங்கேற்றனர்.