உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் 1008 லலிதா சகஸ்ர நாம பூஜை

கண்டாச்சிபுரம் 1008 லலிதா சகஸ்ர நாம பூஜை

கண்டாச்சிபுரம் : சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில்  சோமவார பூஜை நடந்தது.அதனையொட்டி, நேற்று 29ல், காலை 11:00 மணிக்கு 1008  லலிதா சகஸ்ரநாம பூஜையும், உச்சிகால பூஜையும் நடந்தது. ஏராளமான  பக்தர்கள் வாழைப்பூ கலச வழிபாடு செய்தனர். மூலவர் பாலேஸ்வரர் மற்றும்  பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம்  பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !