கள்ளக்குறிச்சி குரு பூஜை விழா
ADDED :2261 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.எஸ்.எஸ்., சார்பில் குரு பூஜை விழா நடந்தது.வாசவி மகாலில் நடந்த விழாவிற்கு, டாக்டர் நாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆரிய வைசிய சங்க கவுரவ ஆலோசகர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., பிராந்திய சகசாரிரிக் பிரமுக் பாலாஜி சிறப்புரையாற்றினார்.விழாவில் ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன், நகர தலைவர் தாமோதரன், செயலர் நாராயணன், நகர் பிரசார் பிரமுக் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.