அன்னத்தில் அமர்ந்த மாரியம்மன்
ADDED :2363 days ago
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் அமர்ந்திருக்கிறாள். அன்னத்தின் மீது அமர்ந்த மாரியை வேறெங்கும் காண இயலாது. அம்மனின் திருவடிகள் அசுரன் ஒருவனை மிதித்த நிலையில் இருக்கிறது. இங்கு தரப்படும் மூலிகையை சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். நீண்ட காலம் நோயால் அவதிப்படுபவர்களும் அம்மன் அருளால் குணம் பெறுகின்றனர்.