உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் தற்போது உறைகிணறு, மண்பானை மூடி, உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் 5ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. தற் போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்மூடி உள்ளிட்டவை கண்டறி யப்பட்டன.

தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருந்து அருந்த கற்றுள்ளனர். உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைத்துள்ளனர்.  உறைகிணறுகள் அனைத் தும் இரண்டு முதல் 7 அடுக்குகள் உள்ளவாறே கண்டறியப்பட்டுள்ளன. உறைகளை ஒன்றுக் குள் ஒன்றாக அமிழும்படி வடிவமைத்து கிணறுகளில் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உறைகிணறுகள் சரியாமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றை விலங்குகள் உள்ளிட்டவை சேதப் படுத்தாமல் இருக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்க மண் பானைகள், ஜக் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். முதல் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை சுற்றி 260 மீட்டர் தூரத்தில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !