உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்ப பிரச்னை தீர.. இதை படியுங்கள்!

குடும்ப பிரச்னை தீர.. இதை படியுங்கள்!

நன்றாக இருக்கும் குடும்பத்தில் சூறாவளி வீசுவதுண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட்டால் நிம்மதி கிடைக்கும். கணவர், மனைவி இடையே பிரச்னை தீர, இப்பாடலை தினமும் படியுங்கள்.

”மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”

சிவனும், பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து படியுங்கள். இல்லாவிட்டால் விளக்கையே சிவ பார்வதியாக கருதி வழிபடுங்கள். திங்கள், வெள்ளியன்று கோயிலில் விளக்கேற்றுங்கள். குடும்பம் அமைதி பூங்காவாக திகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !