உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திவரதரின் சயன கோலம் நிறைவு: ஆக17 வரை நின்ற கோல தரிசனம்

அத்திவரதரின் சயன கோலம் நிறைவு: ஆக17 வரை நின்ற கோல தரிசனம்

காஞ்சிபுரம்: இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் கடந்த 31 நாட்களாக காட்சியளித்த அத்திவரதரின் சயனகோலம் நிறைவு பெற்றது. நாளை (ஆக.1) முதல் அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பார்.

சயனகோலம் நிறைவு: கடந்த ஜூலை 1 முதல், அத்திவரதர் சயன திருக்கோலத்தில் இருந்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அத்திவரதர் காட்சியளிப்பார் என்பதால், அவரைக்காண தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்த வண்ணம் இருந்தனர்.

31 நாட்கள் 47 லட்சம் பேர்:
இதுவரை கடந்த 31 நாட்களாக அத்திவரதரை 47 லட்சம் பக்தர்கள் வரை தரிசித்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று 3 மணிக்கு விஐபி தரிசனமும், மாலை 5 முதல் பக்தர்களின் தரிசனமும் நிறுத்தப்பட்டது.

ஆக-17 வரை நின்றகோலம்:
அத்திவரதரை நின்றகோலத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் வரும் ஆகஸ்டு 17 வரை காட்சி தருவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !