காமாட்சி பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் தரிசனம்
ADDED :2262 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஊஞ்சல் உற்ஸவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித்திருவிழா ஜூலை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேட்டையன்பட்டி விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம் மற்றும் பொது மக்களால் 10 நாள் விழாவாக நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் ஐந்தாம் நாளன்று இரவு 8:30 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னை காமாட்சி பரமேஸ்வரி ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண் பக்தர்கள் ஆரத்தி குடம் எடுத்து வழிபாடு செய்தனர். ஆகஸ்ட் 1ம் தேதி காலை பால்குடமும், மாலை 5:00 மணிக்கு பூத்தட்டு திருவிழாவும் நடைபெறும், ஆகஸ்ட் 2ம் தேதி பகல் 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடைபெறும், ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.