உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தை சுத்தம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தை சுத்தம் செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், நேற்று  30ல், சுத்தம் செய்தனர்.

சென்னையில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறைக்கு, ஏரி, குளங்கள் துார் வாரப்படாததே காரணம் என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து,நீர்நிலைகளை சீரமைக்க, ’களமிறங்குவோம் நமக்கு நாமே’ என, பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழ் தொடர்ந்து, விழிப்புணர்வு செய்தி வெளியிட்டு வருகிறது.இதன் எதிரொலியாக, நீர்நிலைகளை சீரமைக்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஏரி, குளங்களை துார் வாரி சுத்தம் செய்யும் பணிகளில் சமூக நல அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் களம் இறங்கி உள்ளன.இந்நிலையில் நேற்று 30ல், திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் குளத்தை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, சத்வீர் சிங் அஷ்வால் தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் சுத்தம் செய்தனர்.தொடர்ந்து வீடு வீடாக சென்று, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !