பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2265 days ago
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை 5:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதே போல் பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில், செம்மேடு, புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் கோவில், திருவதிகை குணபரேஸ்வரர் கோவில் களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.