சேலம் கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
ADDED :2269 days ago
சேலம்: கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், சேலம், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று (ஜூலை., 29ல்), ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மணிமுத்து தலைமை வகித்தார்.
அதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை, 5,000 ரூபாய் வழங்குதல்; அரசின் நல உதவிகள் பெற, பூசாரிகளுக்கு, ஆண்டு வருமான உச்சவரம்பு தொகை, 24 ஆயிரம் ரூபாயை, 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தல்; அறங்காவலர் குழுவில், பூசாரி களையும் சேர்த்தல் என்பன உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட் டனர். மேலும், இதுதொடர்பான, கோரிக்கை மனுவை, முதல்வருக்கு அனுப்பினர்.