சங்கராபுரத்தில் சத்சங்கம் நிகழ்ச்சி
ADDED :2269 days ago
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் சத்சங்க நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் ரோட்டரி முன்னாள் தலை வர் குணசேகரன் இல்லத்தில் நடந்த சத் சங்க நிகழ்ச்சிக்கு, முத்தம்பாயிரம் தலைமை தாங் கினார். கரும்பு பெருக்க உதவியாளர் குணசேகரன் வரவேற்றார்.
உளுந்துார்பேட்டை சாரதா ஆஸ்ரம மாதாஜி அம்பாள், சத்சங்கம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார்.நிகழ்ச்சியில் டாக்டர் கோவிந்தராஜ், சீனுவாசன், சப் இன்ஸ்பெக் டர் ரவிச்சந்திரன், தாகூர் பள்ளி நிர்வாகி கார்த்தி, தாமோதரன், சக்திவேல், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.