உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்

திருத்தணி ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம்

திருத்தணி : திருத்தணி தணிகாசலம்மன், படவேட்டம்மன், வன துர்க்கை,  தணிகை மீனாட்சி அம்மன், பரமேஸ்வரி அம்மன் காந்தி நகர் துரக்கையம்மன்  உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று (ஜூலை., 31ல்), ஆடி அமாவாசையையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து, பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும்  வழிபட்டனர். பழைய பஜார் தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன்  கோவிலில், மாலையில் உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவை எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், திருத்தணி அடுத்த, மத்துார்,  மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, காலை,  10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.அதை  தொடர்ந்து, வைர ஆபரணங்கள் மற்றும் மலர் அலங்காரம் அணிவித்து  தீபாராதனை நடத்தப் பட்டது. இதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !