விக்கிரவாண்டி அருகே அய்யனார் கோவில் முன் மண்டபம் திறப்பு
ADDED :2288 days ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆர்.சி.மேலக்கொந்தை அய்யனார் கோவில் முன் மண்டபம் திறப்பு விழா நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையில் காட்டுப்பகுதியில் பூரணி பொற்கலை உடனு றை அய்யனார் கோவில் உள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி பகுதிகளில் இந்த கோவிலின் குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள் உள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீதரன், ஜனார்த்தனன் குடும்பத்தினர் கோவிலுக்கு முன் மண்டபம் கட்டித் தந்தனர்.அதன் திறப்பு விழாவிற்கு விக்கிர வாண்டி பி.டி.ஓ., அறவாழி தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அய்யனாருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீப ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஜெயராமன், பாஸ்கர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.