உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் ஐந்தாம் நிலை பணி துவக்கம்!

அரங்கநாதர் கோவில் ராஜகோபுரம் ஐந்தாம் நிலை பணி துவக்கம்!

காரமடை : அரங்கநாதர் கோவில் ஏழுநிலை ராஜகோபுரத்தின் ஐந்தாம் நிலை செங்கல் கட்டடம் கட்டுமானப்பணிகள் நடக்கின்றன. காரமடையில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டதால், கடந்த ஆறு ஆண்டுகளில் கல்காரப்பணிகள் மட்டும் முடிக்கப்பட்டன. தற்போது கோபுரத்தில் நான்கு நிலை முடிந்து, ஐந்தாம் நிலை கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: இந்த ராஜகோபுரம் உபயதாரர்கள் மூலம் கட்டப்படுகிறது. 42 அடி நீளம், 29 அடி அகலம், 14 அடி ஆழத்துக்கு பேஸ் மட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 24 அடி உயரத்துக்கு கல்காரப்பணிகள் முடிந்து, கான்கிரிட் போட்டு முடிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் இறுதியில் ஏழு நிலை கோபுர செங்கல் கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதன் பின், சுதை வேலை பணிகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் வளாகத்தில் 12.65 லட்சம் ரூபாய் செலவில் நவீன குளியல் மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்படும். சொர்க்கவாசல் முன்பும், கல்யாண மண்டபம் முன்புள்ள சிமென்ட் சீட் கூரையை எடுத்து விட்டு, 14.50 லட்சம் செலவில் கான்கிரிட் தளம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !