சிதம்பரம் நடராஜர் கோவில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சிதம்பரம் : ஆடி அமாவாசையையொட்டி, நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஆயிரக் கணக்கானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் ஆடி மாத அமா வாசையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசையையொட்டி, சிவகங்கை குளக்கரையில் காலை முதல் ஏராளமானோர் அமர்ந்து, தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.பின்னர் நடராஜர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். குளக்கரையில் 100க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வரிசை யாக அமர்ந்து பொதுமக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், நடராஜர் கோவிலில் நேற்று (ஜூலை., 31ல்) காலை முதல் கூட்ட நெரிசல் அதிக மாக காணப்பட்டது. கடலுார்பெற்றோரை இழந்தவர்கள் அமாவாசை நாட்களில் திதி கொடுப் பது வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று (ஜூலை., 31ல்) காலை முதல் கடலுார் சீல்வர் பீச்சில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் நீராடி, வழிபட்டனர்.