உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம்

கடலுார் முத்துமாரியம்மன் கோவிலில் செடல் மகோற்சவம்

கடலுார் : கடலுார், வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில்  நாளை 2ம் தேதி செடல் மகோற்சவம் நடக்கிறது.இதையொட்டி, நேற்று இரவு 12  மணிக்கு எல்லை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று 1ம் தேதி அதிகாலை 4:30  மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை 2ம் தேதி காலை 6:30  மணிக்கு கெடிலம் நதி நீர் திரட்டி வருதால், 10 மணிக்கு அபிஷேக ஆராதனை,  பகல் 12 மணிக்கு சாகை வார்த்தல், பிற்பகல் 2 மணிக்கு செடல் உற்சவம்,  மாலை 6 மணிக்கு மேல் அம்மன் வீதியுலா நடக்கிறது.3ம் தேதி காலை 10:30  மணிக்கு மஞ்சள் நீர் உற் சவம், அம்மன் வீதியுலா, 4ம் தேதி 6 மணிக்கு மேல்  இரவு 7:30 வரை காத்தவராயனுக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !