திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED :2584 days ago
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (ஜூலை., 31ல்) ஆடிமாத அமாவாசை முன்னிட்டு, மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று (ஜூலை., 31ல்) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு சுப்ர பாதம், 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது.
மூலவர் பெருமாள் பூவங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.