உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில்  விழுப்புரம் மாவட்ட வீரசைவ சிவஞானியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று  முன்தினம் (ஜூலை., 30ல்) இரவு சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.

விழாவையொட்டி, நேற்று (ஜூலை., 31ல்) மாலை 4:30 மணிக்கு இடபகொடி ஏற்றுதல், மாலை 5:30 மணிக்கு இட்டலிங்க ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு திருமஞ்சன ஆராதனை வழிபாடுகள், திரு முறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது.இரவு 7:00 மணிக்கு திருநீற்று பிரசாதம் வழங்குதல், இரவு 7:30 மணிக்கு அடியார்களுக்கு திருஅமுது படைத்தல், இரவு 8:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.  விழாவில் ஏராளமான சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !