வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மஹாகாளி யாகம்
ADDED :2342 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நேற்று (ஆக., 1ல்) மஹா காளி யாகம் நடந்தது. இதையொட்டி, 1,000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு யாகம் நடந்தது.தீமைகள் அகற்றவும், நன்மைகள் பெறவும் இந்த யாகம் நடத்தப்பட்ட தாக முரளிதர சுவாமிகள் கூறினார். தொடர்ந்த அஷ்ட பைரவர் யாகம், கோ பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.