அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை விழா
ADDED :2290 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவிளக்குப்பூஜை, கருப்பையா சாமிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. ஆடி அமாவாசையான நேற்று, அய்யனார் கோவிலில், இரவு 7.00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. கருப்பையா சாமிக்கு சிறப்பு ஹோமங்கள், பஞ்ச பூதத்திற்கான ஹோமங்கள், சிவன், பிரம்மா, விஷ்ணுக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர், ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்து கலசத்திலிருந்த புனித நீரை கொண்டு, கருப்பையா சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.