உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்!

பழநி மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்!

சென்னை : 2012-2013ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது: 120க்கும் மேற்பட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்படும்; அன்னதான திட்டம் மேலும் 50 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்; ஸ்ரீரங்கம் மற்றும் பழநி தண்டாயுதபாணி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது; முக்கிய கோயில்களில் குழந்தைகளுக்கான நீதிகதை வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !