விக்கிரவாண்டியில் 108 பால்குடம் ஊர்வலம்
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கத்தில் அஷ்டபுஜ துர்க்கையம்மனுக்கு ஆடி மூன்றாம் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.உற்சவத்தையொட்டி, முருகன் கோவிலிலிருந்து சக்திவேல் அடிகளார் தலைமையில் 108 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்து.
இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் பூஜை களை பனையபுரம் பாபு அய்யர் செய்திருந்தார். கொட்டியாம்பூண்டி ஞானமுருகன் குழுவினர் சிவவாத்தியம் வாசித்தனர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கருணாகரன் - சாந்தி குடும்பத்தினர் செய்திருந்தனர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், சிவனடியார் வெங்கடேசன், விழாக் குழுவினர் ஜோதிடர் கமலக்கண்ணன், குமாரசாமி, மணி, ரமேஷ், சேதுராமன், ஆறுமுகம், கலையரசி கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.