உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

கடலுார் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

கடலுார்: கடலுார் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல்  உற்சவம் நேற்று (ஆக., 2ல்) நடந்தது. விழா, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. செடல் உற்சவம் நேற்று (ஆக., 2ல்) நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நிகழ்ச்சியில், ’தினமலர்’ மற்றும் சூப்பர் ருசிபால் சார்பில், வழுவழு  தாளில், அழகிய அம்மன் படம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு  ரத உற்சவம் நடந்தது.இன்று (3ம் தேதி) புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா  நடக்கிறது. 4ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம், 5ம் தேதி இரவு  7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில்  நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா, மேலாளர் ஆழ்வார்,  முருகானந்தம், கோவில் பூசாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !