உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் தேரோட்டம்

திண்டிவனம் ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் தேரோட்டம்

திண்டிவனம்: ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் 2ம் ஆண்டு தேர்  திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.திண்டிவனம்  அடுத்த ஒலக்கூர் முத்தாலம்மன் கோவி லின், இரண்டாம் ஆண்டு திருத்தேர்  உற்சவம் நேற்று (ஆக., 2ல்) நடந்தது.

இதையொட்டி நேற்று (ஆக., 2ல்) காலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. 9:00 மணியளவில், புதிய திருத்தேர் வீதியுலா நடந்தது.விழாவில், ராம்டெக்ஸ் தியாக ராஜன், வெங்கடேசன், நடராஜன்,  ரமணிகாந்த் மற்றும் ஒலக்கூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ராமு உட்பட  முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நிகழ்ச்சியில் ஒலக்கூர்  மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம  பொதுமக்கள், நாட்டாமை தாரர்கள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !