விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் சந்தனக்காப்பு உற்சவம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி சந்தனகாப்பு உற்சவம் நடந்தது.
உற்சவத்தையொட்டி, புவனேஸ்வரி. புவனேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் புவனேஸ்வரி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை ரவி குருக்கள், வேதாத்திரி குருக்கள் செய்திருந் தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர் கோவிந்தன், தர்மகர்த்தா சுப்புராயலு, குமாரசாமி செய்திருந்தனர்.
விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள் பொங்கலிட்டு படையலிட்டும், அன்னதானமும் செய்தனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை மூன்றாம் வெள்ளி உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.