திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர தேர்
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவ த்தை முன்னிட்டு நாளை (ஆக., 4ல்) மாலை தேரோட்டம் நடக்கிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடியில் ஆண்டாள் பூர நட்சத்திரத்தில் அவதரித்த நாளை முன்னிட்டு ஆடிப்பூர உற்ஸவம் 11 நாள் நடைபெறும். ஜூலை 26 ல் கொடி யேற்றத்துடன் உற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை, இரவிலும் வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. நேற்று முன்தினம் (ஆக., 1ல்) காலையில் அலங்கார திருமஞ்சனமும், மாலையில் சூர்ணாபிஷேகமும் நடந்தது.நேற்று (ஆக., 2ல்) குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது. இன்று (ஆக., 3ல்) காலை திருவீதி புறப்பாடு, மாலையில் தேருக்கு தலை அலங்காரம் ஏற்றுதலும் நடைபெறும். நாளை (ஆக., 4ல்) காலை 8:16 மணிக்கு மேல்ஆண்டாளும்.பெருமாளும் தேரில் எழுந்தருளுகின்றனர்.
மாலை 4:06 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். மறுநாள் காலை திருப் பாற்கடலில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப் பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உற்ஸவம் நிறைவடைகிறது.