விருத்தாசலம் செங்கழனி மாரியம்மனுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்
விருத்தாசலம்: ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, விருத்தாசலம் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந்து, செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 37வது ஆண்டு செடல் உற்சவ விழா, கடந்த மாதம் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடந்தது.நேற்று (ஆக., 2ல்) காலை செங்கழனி மாரியம் மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட் களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
காலை 10:30 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி சுமந் தும், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனு க்கு பாலபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல், பாலாஜி நகர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மணலுார் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், விமான அலகு அணிந்தபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.