உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி கோயில்களில் ஆடி வெள்ளி பூஜை

தேனி: ஆடி 3வது வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயி ல்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். கூழ்பிரசாதம் வழங்கப்பட்டது.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி.நகர் கணேச கந்தபெருமாள் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு,  அலங்காரம், தீபாரா தனை நடந்தது.

*கூடலூர்: கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மகா லட்சுமி  அம்மனு க்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுருளிமலை பழநி மலை பாத யாத்திரைபெண்கள் குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.

கூடலூர் துர்க்கையம்மன் கோயிலில் பெண்கள் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி  வழிபட் டனர். சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெண்கள் பாத யாத்திரையாக  வந்தனர்.

கூடலூர் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ்  பிரசாதம் வழங்கப்பட்டது.

போடி: குலாலர்பாளையம் காளியம்மன் கோயில் மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன்,  நந்த வனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், சுப்பிரமணியர் கோயிலில் துர்க்கை  அம்மன், புதுக்காலனி ஆதிபராசக்தி கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்  மலை மீதுள்ள வடமலை நாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,  தீபாராதனை நடந்தன பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றின் கரையில்  அமைந்துள்ளது. மூடிய கதவிற்கு பூஜை செய்யப்படுகிறது. நேற்று (ஆக., 2ல்) மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வ ருகை அதிகமாக இருந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பச்சைப் பட்டு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

* வைகை அணை வரதராஜ் நகர், பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் சிறப்பு  வழிபாடு நடத்தினர். மேலும் கூழ் காய்ச்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !