உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்
ADDED :2295 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 28ம் தேதி ஆடிப்பூர விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 8:00 மணிக்கு ஆண்டாள் பெருமாள் புறப்பாடாகி வீதி உலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அலங்கார மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம், 2:00 மணிக்கு நான்காயிர சாற்றுமறை நடந்தது. தொடர்ந்து, ஆண்டாள் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.