உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி செல்வாம்பிகைக்கு வளையல் அலங்காரம்

செஞ்சி செல்வாம்பிகைக்கு வளையல் அலங்காரம்

செஞ்சி:செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகைக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு 18 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 18 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரமும் செய்தனர். மாலை 5 மணிக்கு விசேஷ திரு விளக்கு பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு ஊர்வலமாக சீர் கொண்டு வந்தனர். 9.15 மணிக்கு மகாபுஷ்பாஞ்சலியும். தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. லலிதா செல்வாம் பிகை நாமாவலி பூஜையும், கோவில் வளாகம்முழுவதும் மலர் அலங்காரம் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !