திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூரம்
ADDED :2362 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவ விழா நடந்தது.நேற்று முன்தினம் (ஆக., 4ல்) காலை 10:30 மணிக்கு மூலவர் ஆண்டாளுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன.
சிறப்பு அலங்காரத்தில்ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் உற்ஸவர் ஆண்டாளுக்கு சந்தனக்காப்பு, தீபாராதனை நடந்தது. இரவு ஆண்டாள் திருவீதி உலா வந்தார். திருமணமான பெண்கள் கருட பஞ்சமிவிரதமிருந்து, நேர்த்தி செலுத்தினர். நேற்று (ஆக., 5ல்) காலை 10:30 மணிக்கு கருடருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.