அத்தி வரதர் ’டோனர் பாஸ்’ பெறுவதில் தள்ளுமுள்ளு
காஞ்சிபுரம்:அத்தி வரதரை தரிசிக்க, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில், ’டோனர் பாஸ்’ வழங்கும் இடத்தில், நேற்று (ஆக., 5ல்), தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், ஜூலை 1 முதல், வெகு விமரிசையாக நடைபெறுகிறது.இதுவரை, 48 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்துள்ளனர். நேற்று (ஆக., 5ல்), செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர், ராஜு, அத்தி வரதரை தரிசித்தார்.நேற்று, திங்கட்கிழமை, பணி நாள் என்பதால், கூட்டம் குறைவாக இருக்கும் என பலரும் நினைத்து, கோவிலுக்கு வந்தனர்.
ஆனால், கோவிலை சுற்றியுள்ள வடக்கு மாட வீதியிலும், அண்ணா அவென்யூவில் உள்ள பந்தலிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, வரிசையில் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இது ஒருபுறம் இருக்க, டோனர் பாஸ் வாங்க, காஞ்சிபுரம் சப் -- கலெக்டர் அலுவலகத்தில், கூட்டம் குவிந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.எம்.பி., கடிதத்துக்கு, மூன்று டோனர் பாசும், அமைச்சர் கடிதத்துக்கு, நான்கு பாசும் வழங்கப்படுகிறது.
சிபாரிசு கடிதத்தை எடுத்து வரும் பொதுமக்கள், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வரிசை யில் நின்று, பாஸ் பெற்று சென்றனர். கூட்டம் அதிகமானதால், சலசலப்பு மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.அத்தி வரதரை தரிசிக்க, பல இடங்களில் இருந்து வந்த வாகனங்களால், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இடையே, நேற்று (ஆக., 5ல்), மாலை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், வாலாஜாபாத் - ஒரகடம் பகுதியிலும், வாகனங்கள் ஸ்தம் பித்து நின்றன.காஞ்சிபுரம் - சென்னை இரவு நேர ரயில் அவசியம்தென்னக ரயில்வே சார்பில், அத்தி வரதர் வைபவத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கும், செங்கல் பட்டிற்கும், 18 ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு கடைசி ரயில், இரவு, 7:00 மணிக்கு இயக்கப்படுகிறது.
அத்தி வரதரை தரிசித்துவிட்டு, 7:00 மணிக்கு மேல், தாம்பரம், சென்னைக்கு, ஆயிரக்கணக் கானோர் செல்ல வேண்டியுள்ளது. ஆனால், 7:00 மணியோடு சென்னைக்கு கடைசி ரயில் இயக்கப்படுவதால், பயணியர் அவதிப்படுகின்றனர். பஸ்களிலும், கூட்டம் அலைமோதுகிறது. இரவில், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு, கூடுதலாக இரண்டு ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.