திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கல்யாணம்
ADDED :2258 days ago
திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத்திருவிழா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (ஆக., 5ல்) திருக்கல்யாணம் நடந்தது. ஆதிரெத்தினேஸ் வரர் பிரியாவிடையுடன், சிநேகவல்லி அம்மன் திருமண கோலத்தில் காட்சிய ளித்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:15 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்க ப்பட்டது. இன்று காலை சுந்தரர் கயிலாய காட்சி நடைபெற்றது.