கொட்டாம்பட்டியில் 87 ஆடுகள்.. 575 சேவல்.. பழமை மாறாத படையல்
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி அருகே மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஆடு, சேவல் படையலிட்டு ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட விநோத வழிபாடு நடந்தது.
மேலூர் வீரசூடாமணி பட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திரு விழாவை முன்னிட்டு ஜூலை 29ல் பக்தர்கள் காப்பு கட்டி எட்டு நாட்கள் விரதமிருந்தனர். இதில் கச்சி ராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் செலுத்திய 87 ஆடுகள், 575 சேவல்களை பெரியகண்மாயில் வெட்டி ரத்தத்தை தண்ணீரில் கரைத்தனர். அதனால் மழை பெய்து கண்மாய் நிரம்பும் என்பது நம்பிக்கை.
அவர்கள் கூறுகையில், காணிக்கையாக வந்த ஆடு, சேவல்களை வெட்டி மண்பானையிலிட்டு அதன் மேல் வேப்பம் இலைகளை போட்டு அவித்து அம்மனுக்கு படையல் இடுவோம். வேப்பம் இலையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது” என்றனர்.