உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கம்மாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் முத்துமாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.ஆடித்திருவிழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடந்தது.

தினமும், காலை மாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். 2ம் தேதி காலை 9:00 மணியளவில் குளத்திலிருந்து ஏராளமானோர் செடலணிந்தும், பால்குடம் சுமந்து சென்று, நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று (ஆக., 5ல்)மாலை 3:00 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !