விழுப்புரம் அரசமங்கலம் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2301 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆடிப்பூர விழாவை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளும், மாலை வரதராஜ பெருமாள் சுவாமி, பெருந்தேவி தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதில், மாப்பிள்ளை அழைப்பு, மணப்பெண் சீர்வரிசை ஊர்வலம், தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேஷ்பாபு, கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி பட்டாச்சார்கள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.