உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் பூட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

சங்கராபுரம் பூட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

சங்கராபுரம்: பூட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக 1.80 லட்சம் ரூபாய் வசூலானது.சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கோவி லில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் (ஆக., 4ல்) கோவில் உண்டியல் இந்து அறநிலையத் துறை ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில், முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக 1.80 லட்சம் ரூபாய் இருந்தது.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !