விளாச்சேரியில் தயாராகின்றன விநாயகர் சிலைகள்
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில்விநாயகர் சதுர்த்திக்காக ’மெகா’ களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.
இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் களிமண், பேப்பர்கூழ், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், சிமென்ட் ஆகியவற்றால் பல்வேறு சுவாமி, தேச தலைவர்கள் சிலைகள், கொலு பொம்மைகள், கிறிஸ்துவ குடில்களை தயாரிக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்காக3 இன்ச் முதல் 15 அடி உயரமுள்ள திரிபுர கணபதி, மகா கணபதி, துவஜ கணபதி, பால கணபதி, லிங்க விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றன. இச்சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ளன.
சிலை தயாரிப்பில் ஈடுபட்ட பிச்சை கூறியதாவது: முன்னோர்கள் கிராம திருவிழாக்களுக்காக களி மண்ணால் குதிரைகளை தயாரித்தனர். 30 ஆண்டுகளாக குடும்பத்தினருடன்இணைந்து விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறேன். இரண்டு அடி உயரம் வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து வாட்டர் பெயின்ட் அடிக்கிறோம். மெகா விநாய கர் சிலைகள் 30 தயாரிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க 10 நாட்கள் ஆகும் என்றார்.