திருமங்கலம் குபேர சாய்பாபா கோயில் திருவிளக்கு வழிபாடு
ADDED :2360 days ago
மதுரை:திருமங்கலம் புளியங் குளம் செந்திலாண்டவர் ஆசிரமம் குபேர சாய்பாபா கோயில் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் உசிலம்பட்டி ரோடு மகாலில் திருவிளக்கு பூஜை நடந்தது.டிரஸ்ட் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் திருவள்ளுவன், கிருஷ்ணன், செந்தில் மணிகண்டன், மூவேந்தர் ரவி, சக்திவேல் முன்னிலை வகித்தனர். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். புலவர் சாவித்திரி, வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஞானசம்பந்தன், பேராசிரியை தமிழ்செல்வி பேசினர். ஆலோசகர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.