உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி அத்திவரதர் தரிசனம் ஆக.,16 இரவுடன் நிறைவு

காஞ்சி அத்திவரதர் தரிசனம் ஆக.,16 இரவுடன் நிறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடக்கும் அத்திவரதர் வைபவத்தில் ஆக.16ம் தேதி இரவு அல்லது ஆக.17 அதிகாலையுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும் எனவும், 17 ம் தேதி முதல் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கூறினார். அதாவது, முன்பு அறிவிக்கப்பட்டதற்கு மாறாக ஒரு நாளைக்கு முன்பே, அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்பட உள்ளது.

இது குறித்து கலெகடர் பொன்னையா கூறுகையில், வரும் 17 ம் தேதி அத்திவரதர் சிலையை குளத்திற்குள் வைக்க ஆகம விதிப்படி சடங்குகள் நடக்க உள்ளன. இதனால், 17 ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும். 16 ம் தேதி இரவில் கோவிலுக்குள் இருப்பவர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள். உள்ளூர் மக்கள், 5,6,7 முறை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 70.25 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று (ஆக.,7) மட்டும் 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அத்திவரதர் தரிசனம், ஆக., 17 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !