உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி, ஆதிபராசக்தி கோவிலில், ஆடி பொங்கல் விழா

அவிநாசி, ஆதிபராசக்தி கோவிலில், ஆடி பொங்கல் விழா

அவிநாசி:அவிநாசி, வாணியர் வீதியில் உள்ள முனியப்ப சுவாமி, ஆதிபராசக்தி கோவிலில், ஆடி பொங்கல் விழா நேற்று 7ம் தேதி விமரிசையாக நடந்தது.பொங்கல் விழா, 5ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது; உலக மக்கள் நலம் பெற, நத்தா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, 6ம் தேதி, ஆதிபராசக்திக்கு சிறப்பு அலங்காரம், தீப வழிபாடு நடந்தது. நேற்று (ஆக., 7ல்), காலை, 10:00 மணிக்கு, அலங்கார வழிபாடு, முனியப்ப சுவாமிக்கு, மகா அபிஷேகம் மற்றும் மலர் அலங்கார பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !