உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை: நம்புதாளை கோயில் விழாவில் 9 பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து பறவை  காவடி எடுத்தனர். தொண்டி அருகே நம்புதாளையில் செல்வமுத்துமாரியம்மன் கோயில்  திருவிழா ஜூலை 31ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஆக., 6ல்) இரவு காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குடம்  எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் ஒன்பது பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து மணல் அள்ளும் இயந்திரத்தில் தொங்கியபடி  அலகு குத்தி பறவை காவடி எடுத்தனர்.

முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து  கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !